நிலவுக்கு ஓர் குறிப்பு--

நிலவை காணும் தருணங்களிளெல்லாம்
மனசுக்குள் பூர்த்துக் கிடக்கின்றன அந்த
முற்றங்களும் அழகிய தருணங்களும்.. 

ஒன்றிப் போன ஒரு முழு இரவிடத்தில்
நின்று பார்த்தபடியே நினைவுக் குமிழ்
ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது...


இடைவிடாத நிசப்தம் என்னை கொன்றது
என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளுமா
அந்த முற்றங்கள்.?


எத்தனை கவிதை தடங்கள், எத்தனை
வாழ்க்கைப் படிப்பினைகள்  என்னை
புரட்டிப் போட்டிருக்கின்றன இந்த
முற்றங்களின் முற்றுகைக்குள்..


 ஒரு நதியின் பெருக்கத்தில் கடந்த
காலங்கள் கரையொதுங்குமெனில்
அது விட்டு செல்லும் இடைவெளியில்
என் முற்றங்களும் அடித்து செல்லப்பட்டு

விடுமோ என என் மனதுக்குள் ஒரு
ஏக்கம் ஒரு தவிப்பு இடைவிடாது
நிகழ்ந்த வண்ணம்மிருக்கின்றது...

இவ்வுலகின் கதவுகளை இறுக மூடிய
பின்னும்   எதிரே நின்று நிலவை ரசிக்கும்
என்  ஏழை மனதுக்குள் ஒரு குட்டித் தீவு
அந்த முற்றம் தான்...

அதில் கண்ணீர்  அலைகள்  தினமும்
முட்டி மோதிய பின்னாலும் அரிப்புகளுக்கு
இடம் கொடுக்காது இன்னும் இன்னும்
அகன்று அதிக பலத்துடனும் ஆழத்துடனுமே
என் முற்றங்களின் நிலாப் பயணம்..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72