புரியவில்லை..

உன் மனதை
நேசிக்கும்

என் மனதுக்கு
புரியவில்லை

அழகை மட்டுமே
விரும்பும் உனக்கு
உன் காதலால்
காயப்பட்ட
உள்ளத்தின்
குமுறல்!!
Download As PDF

உன் நிராகரிப்பு..

உன்னோடு பேசவே
என் மனம்
விரும்புகின்றது..

இருந்தும்!!

உன் நிராகரிப்பு
கண்ணீரோடு
காதல் கொள்கிறது..
Download As PDF

உனக்காக...

என் பயணத்தில்
துணைவர நீ
இல்லை...
என் சந்தோஷங்களை
பகிர்ந்து கொள்ள
நீ இல்லை..
நான் துன்பப்படும்
போது ஆறுதல்
சொல்ல நீ
இல்லை..
என் கண்ணீரை
துடைக்க நீ
இல்லை...
என்னில் உரிமை
கொண்டாட நீ
இல்லை..
இருந்தும் நான்
இருக்கின்றேன்
உனக்காக..
Download As PDF

ரஞ்சன நிலா..

உயிர் உள்ளவரை
  உன் நினைவிருக்கும்.!!
Download As PDF

முழுமையாகவே நீ...

எடுப்பதில் வேண்டுமானால்
பாதியாக இருந்திருக்கலாம்
ஆனால் கொடுப்பதில் எப்போதும்
முழுமையாகவே இருந்திருக்கிறாய்
நீ!!
Download As PDF

தொடுவதில்..

தொடுவதில் வேண்டுமானால்
கூச்சம் இருந்திருக்கலாம்...
ஆனால் தொடர்வதில் என்றும்

மிச்சம் வைக்கவில்லை நீ!!
Download As PDF

என்னோடும் உன்னோடும்..

என்னோடு வேண்டுமானால்
கோபம் கொள்ளலாம் காதல்..
உன்னோடு என்றால் மட்டும்

கொண்டாட்டமாயே காதல்!!
Download As PDF

காத்திருப்பில்...

காத்திருப்பில் வேண்டுமானால்
கால் வலித்திருக்கலாம் காதலுக்கு...
ஆனால் உன்னை பார்த்திருப்பதில்

கண் வலித்ததில்லை காதலுக்கு..
Download As PDF

மோகம் சூடும் ...

வேர்த்திருக்கும் தென்றல்
கூட நீ வெட்கம் விடும்
வேளையில் பூத்திருக்கும்
காதல் கூட நீ மோகம் சூடும்
வேளையில்!!
Download As PDF

தாமதங்கள்...

வருவதில் வேண்டுமானால்
நிகழலாம் தடங்கல்கள். ஆனால்
போவதில் தவறாமல் நிகழ்கின்றன
தாமதங்கள்!!
Download As PDF

Angel Graphic #72