உயிர் மூச்சு..

பூமிக்கும் வானுக்கு இடைப்பட்ட
தூரத்தில் நாதியற்றவனாய் சுற்றி
திரிகிறேன்..

எனக்கு இறக்கைகள் கிடையாது..
என்னை உன் கண்கள் கூட
பார்த்துவிட முடியாது...

ஆனால் நான் உன்னை தினமும்
தழுவுகின்றேன். நான் இல்லை
என்றால் உன்னால் உயிர் வாழவே
முடியாது...

என்னால் தான் பூமியே மகிழ்வடைகிறது.
என்னை போர்த்தி இருக்கும் போதெல்லாம்
நீ குளிர்ச்சி அடைகின்றாய்...

எனது கோபத்திலும் சந்தோசத்திலும்
நீயே நிறைந்தும் இருக்கின்றாய். இப்படி
நான் எங்கு அலைந்து திரிந்தாலும்
என்னையே உனக்காய் தந்துவிட
மறப்பதில்லை...

இப்படி உனக்காய் வாழும் என்னை
ஏன் தினமும் களங்கம் செய்துவிடுகிறாய்.
நான் யார் என்பதை உன்னை படைக்கும்
பிரம்மனிடம் கொள் அவனும் என்னை
தான் அழைத்துவர கை காட்டுவான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72