அவளும் நானும்..

சேர்த்து வைத்த சொந்தமொன்று
சொர்க்கம் காண சென்றது..

சேலை கட்டும் நீலமேகம்
சேர்ந்து வாழ வந்தது...

சேர்த்து வைத்த ஆசைகளெல்லாம்
எல்லாம் இதயம் திறந்து சொன்னது...

சாலை ஓரம் நடந்துபார்ப்போம்
சற்றே என்னுடன் வருவாயா..?

காலை நேர தென்றல் வாங்கி
கூந்தல் உலர்த்தி விடுவாயா..?

வானம் தெளித்த பன்னீர் வளைவில்
வாழ்வை தொலைப்போம் வருவாயா.?

உன் வாசல் திறந்து வாழ்வில் தொலைந்து
வாழ்க்கை ரசிப்போம் இணைவாயா..?
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72