இது ஒரு கல்லூரியின் கதை அல்ல...

பத்தாம் தரம் படிக்கையிலே
பதினொன்றாய் உன்னை
சந்தித்தேன்..

நித்தம் நீ உரைத்தாய் நான்
சாதாரண தரம் என்று..

சற்றே நிமிர்ந்து கொள்ளேன்றேன்
உன் தலையில் தட்டுப்படும்
உயர்தரத்தை எட்டிப் பிடி
என்றேன்...

சரியென்று தலையசைத்தபடி
பல்கலைக்கழக வாசலில்
சிரித்தபடி நீ நின்றாய்..

இங்கே தான் நீ தந்த உயிர்
அணுக்களின் பிறப்பை உறுதி
செய்வேன் என்று சொல்லியபடி
மருத்துவத்தின் ஆழத்தை
கண்டறிந்தாய்....

ஆறு வருடங்களின் பின்
மீண்டுமொருமுறை பத்தாம்
தரத்தின் மிடுக்கோடு பத்திரிகை
ஒன்றில் உன்னைக் காண்கின்றேன்..

முற்றும் முகிழ்ந்து முதுநிலை
பட்டத்துடன் சற்றும் சலனமின்றி
சரித்திரம் காண்கின்றாய்..

நித்தம் நீ சிந்தும் உன் இதழ்களின்
புன்னகை முத்தம் தந்து செல்கிறது
சத்தம் இன்றி சொல்லிக் கொள்கிறேன்
சஞ்சரிக்கும் என் மனதுக்கு...

எத்தனை வருடங்கள் எனைக் கடந்து
சென்றாலும் அத்தனையிலும் நீ மட்டுமே
வாழ்ந்து கொள்வாய் என்பதை துருவ
நட்சத்திரங்கள் மீது உறுதி செய்து
கொள்கிறேன்..

என்றோ ஒரு நாள் உன் பூமிக்கு நான்
வரும் போது நீயும் உன் சிசுக்களும்
என் வாழ்வு தந்த வாரத்தில் நீண்ட
ஆயூள் நிறை ததும்ப நீடூழி வாழட்டும்..

இத்தனைக்கும் அடித்தளம் இட்டவர்களில்
நானும் ஒருவனாய் வாழ்ந்து கொள்வதை
ஒரு கணம் நினைக்கையில் உன்னை விட
அதிகமாய் நான் மட்டுமே பெருமைப்
பட்டுக் கொள்கிறேன்..

[எங்கிருந்தாலும் எங்களின் இதயம்
உங்களுக்காக துடிக்கும் எங்களின்
வாழ்க்கை மழைத்துளியாகி உங்களை
வந்து நனைக்கும்]
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72