கொள்ளை வனப்பில்
கொழுந்து விட்டெரியும்
கண்ணகியே..
மெல்ல நடந்து வா..
உன் தங்க பாததத்தில்
கொலிசொன்று தகதகக்க
அங்கம் தணல் சுமந்து
அகிலம் நீதி தர மதுரை
எரித்தாய்..
ஒற்றை கொலிசெடுத்து
ஒரு கரம் நீ உயர்த்தி
பற்றவைத்த தீ கண்டு
பதை பதைத்தது அன்று..
இன்று எம் மண்ணில்
வன்மம் தலை தவழ்ந்து
வடிவம் நாம் இழந்து
வாசலில் நிற்கின்றோம்..
எம் வாழ்வுக்கு அர்த்தம்
சொல்ல ஒற்றை கொலிசுடன்
ஊரின் விழிம்பில் காத்திருக்கிறோம்
ஒரு முறை வந்தருள்வாய்..
Download As PDF
கொழுந்து விட்டெரியும்
கண்ணகியே..
மெல்ல நடந்து வா..
உன் தங்க பாததத்தில்
கொலிசொன்று தகதகக்க
அங்கம் தணல் சுமந்து
அகிலம் நீதி தர மதுரை
எரித்தாய்..
ஒற்றை கொலிசெடுத்து
ஒரு கரம் நீ உயர்த்தி
பற்றவைத்த தீ கண்டு
பதை பதைத்தது அன்று..
இன்று எம் மண்ணில்
வன்மம் தலை தவழ்ந்து
வடிவம் நாம் இழந்து
வாசலில் நிற்கின்றோம்..
எம் வாழ்வுக்கு அர்த்தம்
சொல்ல ஒற்றை கொலிசுடன்
ஊரின் விழிம்பில் காத்திருக்கிறோம்
ஒரு முறை வந்தருள்வாய்..
2 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
very nice to read.
http://kaatruveli-ithazh.blogspot.com/
மிக்க நன்றி உறவே உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டதற்கு ...
Post a Comment