கனவோடு வாழ்ந்த ஒரு நிமிடம்..

உள் மனதின் ஆழத்தில்
உறங்கியது ஜீவன்..
ஊமையாய் தனித்திருக்க
உருகிய எண்ணத்தில்
எரிகிறது வாழ்வு.

சுற்றும் திசைகளின்
அசைவில் கைகோர்த்து
நடந்து பார்க்கிறேன்..

தொலைவில் தலை
அசைக்கும் இலைகளின்
முதிர்வு என்னை அருகே
வரச்சொல்லி சைகை
செய்கிறது.

நீள நடக்கின்றேன்.....

கால்களில் தட்டுப்படும்
என் கடந்த காலத்தின்
தடயங்கள் நிகழ்கால
பயணத்தில்
முட்டிக்கொள்கிறது..

முடிந்தவரை
முயற்சிக்கின்றேன்
அடுத்த அடியின்
ஆரம்பத்திற்காய்.

முன்னோக்கிய என்
பயணத்திற்கு
அடித்தளம் இட்டு
சென்றவள் நீ...

உன்னை கடந்து போக
என்னை நான் பலமுறை
கேட்டுக்கொள்கிறேன்.

எனக்குள் தனிமைபட்டுப்
போன மனச்சாட்சி,
மண்டி இட்டுக்கொண்டது.

மறுபடியும் மறுபடியும்
தட்டி எழுப்பிக் கேட்டுக்
கொள்கிறேன்...

எதோ ஒன்றை சொல்வது
போல உதடுகள் அசைந்தாலும்
சத்தம் இல்லாத அந்த
நொடிக்கு மட்டும் மௌனம்
கட்டுப்பட்டுக் கொள்கிறது..

விழிகள் அசைந்து கொள்ள
மடல்கள் தாழ்திறந்து
ஒளியில் மிதக்கும்வரை
நான் கண்டது கனவுதான்
என்பதை நிரூபித்து மறுபடியும்
போர்வைக்குள் முடங்கிக்
கொள்கிறான்.!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72