வட்ட நிலவுக்கு வடிவம்
கொடுத்தது யாரு..?
வண்ண பூக்களுக்கு
வாசம் கொடுத்தது
யாரு..?
சிட்டுக் குருவிக்கு
சிகரம் தொட்டுவர
கற்றுக் கொடுத்தது
யாரு..?
சில்வண்டின் ராகத்தில்
மெட்டுக் கட்டியது
யாரு..?
பட்டுப் பூச்சிக்கு
தொட்டில் கட்டியது
யாரு..?
படுத்துறங்க புல்வெளிக்கு
மெத்தை போட்டது
யாரு..?
விட்டு விட்டு தூறும்
மழைத்துளிகளுக்கு
விழிகள் கொடுத்தது
யாரு..?
எட்டி எட்டி பார்க்கும்
விடி வெள்ளிகளுக்கு
கண்சிமிட்ட கற்றுக்
கொடுத்தது
யாரு...?
எழுதி எழுதி நிறைத்த காகித
தாள்களுக்கு வரிகள்
கொடுத்தது
யாரு.?
கட்டறுத்த தென்றலுக்கு
காதல் மொழி சொல்லிக்
கொடுத்தது
யாரு..?
இத்தனைக்கும் பதில்
ஒன்று யார் சொல்லி போவார்...
இறுதியிலே யார் சொன்னால்
யார் இங்கு வாழ்வார்..?
Download As PDF
கொடுத்தது யாரு..?
வண்ண பூக்களுக்கு
வாசம் கொடுத்தது
யாரு..?
சிட்டுக் குருவிக்கு
சிகரம் தொட்டுவர
கற்றுக் கொடுத்தது
யாரு..?
சில்வண்டின் ராகத்தில்
மெட்டுக் கட்டியது
யாரு..?
பட்டுப் பூச்சிக்கு
தொட்டில் கட்டியது
யாரு..?
படுத்துறங்க புல்வெளிக்கு
மெத்தை போட்டது
யாரு..?
விட்டு விட்டு தூறும்
மழைத்துளிகளுக்கு
விழிகள் கொடுத்தது
யாரு..?
எட்டி எட்டி பார்க்கும்
விடி வெள்ளிகளுக்கு
கண்சிமிட்ட கற்றுக்
கொடுத்தது
யாரு...?
எழுதி எழுதி நிறைத்த காகித
தாள்களுக்கு வரிகள்
கொடுத்தது
யாரு.?
கட்டறுத்த தென்றலுக்கு
காதல் மொழி சொல்லிக்
கொடுத்தது
யாரு..?
இத்தனைக்கும் பதில்
ஒன்று யார் சொல்லி போவார்...
இறுதியிலே யார் சொன்னால்
யார் இங்கு வாழ்வார்..?
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment