வாழ்வின் எதிரொலி..

தொலைபேசி அழைப்பில் ஒரு
அழகான குரல்...
யாரென்று கேட்கிறது
உள் மனம்.?

மறு முனையில் யார்
பேசிறீங்க..?..

மனதின் ஆழத்தை சீண்டுவது
போல ஒரு வினாடி.

மௌனம் மட்டும் ஒற்றிக்
கொள்ள சிறு நாணத்துடன்
சிரித்தபடி.

நீங்க தானே பேசிறீங்க...

யாராக இருக்கும் என எனக்குள்
நானே கேள்விகளை கேட்டபடி
மறுபடியும் தொலை பேசியின்
நெருக்கத்தை அதிகமாக்கி
கொள்கிறது கரங்கள்...

செவிகளில் சந்திப்பில் விழுந்த
அந்த குரலுக்கு சொந்தக்காரர்
யாரென்று அறிந்து கொள்ளவே ..

ஆம் அது நான் தான் என்று
சொல்லி சிரித்தபடி முடிக்கிறது
எதிரொலி..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72