உன் கல்லறையோடு ஒரு நிமிடம்..

அன்றைய நாள்
முதல் முதலாய்
உன்னை சந்தித்தேன்.!

மெல்லிய புன்னகை
இதழ்களுக்கு மட்டும்
புதிய தரிசனம்..

நீண்ட கருங்கூந்தல்..
கடைக்கண் பார்வை..
வட்ட நிலவு ஒன்று
சேர்ந்து வடிவமைத்த
வதனம்..

நெற்றிப் பொட்டில்
நிறைந்த கருமை..
ஆழமான உச்சரிப்பு..
அன்பான பேச்சு..

நீள நடந்தாலும்
நிழல்கள் கூட
பின்தொடரும்
பிஞ்சு பாதம்..

வற்றாத நதிகளின்
வளைவுகளில்
புருவங்கள்..

இத்தனைக் குள்ளும்
என் மனம் அழகாய்
கூடு கட்டி வாழ்ந்து
கொண்டது அன்று
ஒரு நாள்..

ஒரு நொடி வாழ்ந்த
அந்த மகிழ்வில் இன்று
வரை வாழ்கிறது என்
உயிர்..

நீ உறங்கும் கல்லறை
அருகில்..
...நீ...
ஈழத்தின் மகளா..?
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72