மனிதம் பிறந்த பூமியில்
புனிதம் புதைகுழி காண்கிறதே..
நீதி தேவதையின் தராசுகள்
தாங்கும் தங்க கயிறுகள்
அறுந்து தூக்கிட்டு கொள்கின்றன..
போதி மரத்து கடவுளுக்கு
பிணத்தை விற்று காசு வாங்க
வன்மம் நிறுவை செய்யப்படுகின்றது..
கதறி கதறி கண்ணீரில் கரைந்து
தன் கற்பை பறிகொடுத்த
கண்மணிகள் கண்ணகியிடம்
கருவுற்ற தம் குச்ச உயிரை
சுதந்திரமாய் மண்ணில் பிரசவித்து
மரித்துக் கொள்ள முள் முடி
தரிக்கின்றனர்..
பிஞ்சு சிசுக்களின் பீறிட்ட கண்ணீர்
உலகம் வரை மழையாகி, பின்
உப்பாகி உயிர் குடிக்க காத்திருக்கு
அடுத்த மாதம் வரை பொறுத்திரு
மானிடனே உனக்கு நான் நீதி
வாங்கி தருகிறேன் என்றபடி
புலத்தின் ஒரு மூலையில்
என் குரல்..!
Download As PDF
புனிதம் புதைகுழி காண்கிறதே..
நீதி தேவதையின் தராசுகள்
தாங்கும் தங்க கயிறுகள்
அறுந்து தூக்கிட்டு கொள்கின்றன..
போதி மரத்து கடவுளுக்கு
பிணத்தை விற்று காசு வாங்க
வன்மம் நிறுவை செய்யப்படுகின்றது..
கதறி கதறி கண்ணீரில் கரைந்து
தன் கற்பை பறிகொடுத்த
கண்மணிகள் கண்ணகியிடம்
கருவுற்ற தம் குச்ச உயிரை
சுதந்திரமாய் மண்ணில் பிரசவித்து
மரித்துக் கொள்ள முள் முடி
தரிக்கின்றனர்..
பிஞ்சு சிசுக்களின் பீறிட்ட கண்ணீர்
உலகம் வரை மழையாகி, பின்
உப்பாகி உயிர் குடிக்க காத்திருக்கு
அடுத்த மாதம் வரை பொறுத்திரு
மானிடனே உனக்கு நான் நீதி
வாங்கி தருகிறேன் என்றபடி
புலத்தின் ஒரு மூலையில்
என் குரல்..!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment