மனக்கூடுகள்..!

இன்று போய் நாளை வா
இருக்கிறேன் என்றது
இயற்கை..!

இருபது நிமிடங்கள் கழிந்தபின்
இன்னொரு முறை சொல்லியது
நின்று நிதானித்து போ நிலையாய்
நான் இருக்க
மாட்டேன்..!

சென்று வருகிறேன் என
கையசைத்து செல்லமாய்
மொழிகள் ஏதும் பேசாமல்
புன்னகை ஒளி சிந்தி
மனக் கூட்டை தெப்பமேற்றிக்
கொள்கிறது
மனிதம்.!

மனிதம் நிறைந்த இயற்கையின்
கரங்களில் நீட்டி முடக்கும்
எழுது கோல்கள் எப்படி வந்து
சேர்ந்தன..?

இத்தனை எத்தனை கேள்விகளுக்கு
பதில்களை படைத்த பிரம்மனே
ஏதும் அறியமுடியாமல் மூடிய
முகத்துடன் பூமிக்கு
வருகிறான்..!

யாரும் அறியமுடியாத பிரம்மனை
இயற்கையோடு கரைந்த ஜீவிதங்கள்
கண்டுகொள்கின்றன..!

நாணித் தலைகுனிந்து நாற்றிசையும்
பார்த்துவிட்டு ஏனிப்படி வாழ்வு
என பிரம்மனைக்
கேட்க ..

கூனிக் குறுகி கூன் விழுந்த வாழ்வுகளை
ஏணிப்படி சமைத்து ஏற்றிவிடுதாய்
சொல்லி பீறிட்டு மறைக்கிறது
பிரம்மம்...!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72