காதல் செய்யும் இதயங்களுக்காய்.!

கண்கள் பார்த்து, இதயம் சேர்த்து,
இதழ்கள் பாலமாய் உள்ளே உயிரை
பத்திரப்படுத்தும் இரண்டு ஜீவன்களின்
பரிதவிப்பு
காதல்.!

இங்கே தூறல்கள் கூட தூர்ந்து
விடுவதில்லை..!

தூறியபின் மண்ணில் ஈரம்
காய்ந்துவிடுவதில்லை..!

இரவுகள் தனிமையாய்
அந்தரிக்கும்..!

பகலின் நீளத்தை அதிரரிக்கச்
சொல்லி இறைவனுக்கு
விண்ணப்பமிடும்..!

உணர்வுகள் அதிகமாக உயிர்
ஒன்று வாழ்வதை சிந்தை
எண்ணிக்கொள்ளும்..!

இதயத் துடிப்பின் ஆழத்தில்
சுவாசங்கள் நிரம்பிக்
கொள்ளும்..!

முதல் சிசுவுக்கு இதயம்
இடம் கொடுக்கும்..!

காதல் மட்டும் வாழ்வதாக
உலகம் ஞாபகப் படுத்தும்..!

அர்த்தம் கேட்பதற்காய்
உறக்கத்தின் அலைவரிசைகளில்
முகவரி இடப்பட்டு தந்திகள்
பரிமாறிக் கொள்ளப்படும்..!

எட்டு திசையிலும் விளுந்துகொள்ளும்
எதிரொலிகளை செவிகள் அகலத்திறந்து
ஒன்றாய் ரசிக்கும்..!

இங்கே காதல் மட்டும் விளிகள்
மூடிக்கொள்வதில்லை காதலர்கள்
வாழும்வரை..!

எனவே காதலிக்கும் சொந்தங்களே..
நீங்களும் வாழ்ந்து உங்கள்
காதலையும் வாழவையுங்கள்..!

அனைவருக்கும் மனம்
நிறைந்த காதலர்தின
வாழ்த்துக்கள்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72