அழகான புன்னகை..

எத்தனை முறை புன்னகை செய்தாலும்
சலிக்காது ஓரமாய் இருந்து ரசித்துக்
கொள்ளும் குழந்தையாய் என் உள்ளம்..

அன்பான பேச்சு,அழமான சிந்தனை,
தெளிவான பார்வை இத்தனையும்
நான் அதிகமாய் உன்னிடம் இருந்து
கற்றுக்கொண்டேன்...

இதை நீ மறுபடி ஞாபகப் படுத்திப் பார்
அங்கே நீ எழுதி வைக்காத நாட்குறிப்பில்
வெண்மையாய் ஒரு பக்கம் இருக்கும்
அதில் எனது மனம் என்பதை நீ
அடையாளம் கண்டு கொள்வாய்..

நீ நாட்களுக்கு பூட்டுப்போட்டு
வருடங்களை காண ஒரு உடைந்த
கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றபடி
தொலைவினை ரசிக்கிறாய்...

எதிரே உன் கண்கள் தட்டும்
என் வாலிபத்தை கிழித்துப்
போட்டுவிட்டு தொலைவினில்
தேய்ந்து போகும் நிலவுக்கு
தினம் தினம் விண்ணப்ப மடல்
அனுப்புவதாய் உனது அயல்வீட்டு
நட்சத்திர சொந்தங்கள் என்னிடம்
அடிக்கடி சொல்லிக்கொள்கின்றன.

நீ கண்டம் தாண்டி போவதாக
கோள்கள் தந்தி அனுப்புகின்றன.
நிறுவப்பட்ட ஒன்பது கோள்களில்
நீ இணைந்து கொள்வதில் எனக்கு
ஏதும் ஆட்சேபனை இல்லை ஆனால்
உன்னை சுற்றுவது சூரியன் மட்டுமே
என்பதை எண்ணத்தில் கொள்...

தினம் தினம் வட்டமடித்த போது
பட்டாம்பூச்சிகள் கூட என்னை
கேலி செய்தன இருந்தும் என்
சிறகுகள் உனக்காய் செய்யப்பட்டவை
என்பதால் சுதந்திர வானத்தில்
மிதந்தேன் உன்னை சுமந்துவர..

நியமான நேசம் ஒரு தடவை
என்பது நீ எனக்கு சொல்லிக்
கொண்ட வார்த்தை அந்த
வார்த்தைகள் இன்றும் பலமாய்
இருக்கின்றன என்னோடு மட்டும்
இருப்பதால்...!
Download As PDF

2 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

ABIMA said...

very nice mathuuuu

mathusan said...

அபி ரொம்ப ரொம்ப நன்றி பா

Angel Graphic #72