மண் தின்ற வாழ்வு..

மரத்துப் போன வாழ்வின்
எச்சங்களாய் மனித மச்சைகள்
மண்ணில் ஒட்டிக்கொண்டாலும்
ஒவ்வொரு இதயங்களுக்குள்ளும்
உயிர் அற்று வாழ்வு உதயமாகிறது..

உனதும் எனதும் வாழ்வு என்றோ
ஒரு நாள் கருவறையில்
எழுதப்பட்டாலும் எம் பிறப்பும்
இறப்பும் மண்ணில் தான் கரைந்து
கொள்ள போகிறது.

உன்னை விதைக்கப்படும் போது நான்
சாம்பலின் நடுவே சுவாசங்களால்
நெய்யப்பட்ட நீற்றில் நெகிழ்ந்து
கொள்வேன்..

இந்த பிரபஞ்சம் கடந்து என்னோர்
உலகை ரசிக்க வாழ்வு கொடுத்து
வைக்கவில்லை.

உன் கைகளில் உறுதியான ஆய்த
எழுத்து இருப்பதால் நீ என்னை கடந்து
என்னோர் கிரகத்தில் நிலைத்திருக்கிறாய்.

சுவாசங்கள் நிறைத்த காற்று மண்டலத்தில்
நீ தென்றலாக வந்து கரம் கொடு
உயிர் அற்றுப்போகும் அந்த ஒரு நொடி
மறுபடியும் மீண்டு வரும்.

அங்கே.! உனக்காய்..!

உனைக் சுமந்த உயிரணு
உனக்குள் நிறைந்த கருவறை
எண்ணம் கலந்து மணவறை
எழுதினான் ஈற்றில் கல்லறை''

அத்தனை ஈகங்களும்
நிறைந்திருக்கும்..நிரையாய்
இருக்கும்.!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72