எல்லோர் எண்ணங்களுக்கும்
சமவலு காணும் நீ என் மனச்
சிலுவை சுமந்திருக்கும் வலிமை
நிறைந்த நிறைமாதங்களின் வலியால்
பிரசவிக்க துடிக்கும் கவிதை சிசுவை உயிர்
பெற்று பூமியில் வலம்வர அனுமதிக்கவில்லையே
ஏன்..?
உனக்காய் எழுதிய கவிதை
வரிகள் நீண்டு சென்றாலும்
முடிவு உன்னிடமே என்பது
உனக்கும் தெரியும் ..
வரிகள் ஒவ்வொன்று
உனக்காய் போராடின,
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
எனக்குள் வாதாடின அவை
எனக்குள் உனக்காய்
எழுதப்பட்டவை..
தினம் தினம் பேசுகின்ற
வார்த்தையில் மனதின்
ஆழத்தை குடைந்து
உள்ளே உற்றெடுக்கும்
அருவிகளின் புன்னகையில்
உன் பிள்ளை முகம்
ஒளிகொடுத்துக் கொள்கிறது.
சிறகுகள் இல்லாத பட்டாம்
பூச்சிக்கு இசையோடு மெட்டு
கட்டி சங்கீதம் கற்றுக் கொடுக்கும்
உன் இனிய பேச்சினை இவ்வுலகம்
தொலைவில் இருந்து ரசித்துக்
கொண்டிருக்க..
மழலை ஒன்று உன் கரம் பற்றி
உன் நட்பு எங்கு என கேட்க
மனம் திறந்து வனம் செய்தாய்
மடி நிறைந்த களிப்பில் மனை
திரும்பி தினம் தினம் அணுவணுவாய்
உயிர் துறக்கின்றேன்..
சிலர் காதல் வந்தால் கவிதை
வருமென சொன்னார்கள்..
சிலர் காதலுக்காய் கவிதை
சொன்னார்கள் ..
சிலர் காதலே கவிதை என
சொல்கிறார்கள்..
என் கவிதைகளோ என்னோடு
கரம் சேர்க்கும் நட்புகளுக்காய்
பிறக்கிறது..
உன்னைத் தவிர..
எங்கே உன் எண்ணம்
முடிந்தால் எழுதிக்
கொள்..!
Download As PDF
சமவலு காணும் நீ என் மனச்
சிலுவை சுமந்திருக்கும் வலிமை
நிறைந்த நிறைமாதங்களின் வலியால்
பிரசவிக்க துடிக்கும் கவிதை சிசுவை உயிர்
பெற்று பூமியில் வலம்வர அனுமதிக்கவில்லையே
ஏன்..?
உனக்காய் எழுதிய கவிதை
வரிகள் நீண்டு சென்றாலும்
முடிவு உன்னிடமே என்பது
உனக்கும் தெரியும் ..
வரிகள் ஒவ்வொன்று
உனக்காய் போராடின,
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
எனக்குள் வாதாடின அவை
எனக்குள் உனக்காய்
எழுதப்பட்டவை..
தினம் தினம் பேசுகின்ற
வார்த்தையில் மனதின்
ஆழத்தை குடைந்து
உள்ளே உற்றெடுக்கும்
அருவிகளின் புன்னகையில்
உன் பிள்ளை முகம்
ஒளிகொடுத்துக் கொள்கிறது.
சிறகுகள் இல்லாத பட்டாம்
பூச்சிக்கு இசையோடு மெட்டு
கட்டி சங்கீதம் கற்றுக் கொடுக்கும்
உன் இனிய பேச்சினை இவ்வுலகம்
தொலைவில் இருந்து ரசித்துக்
கொண்டிருக்க..
மழலை ஒன்று உன் கரம் பற்றி
உன் நட்பு எங்கு என கேட்க
மனம் திறந்து வனம் செய்தாய்
மடி நிறைந்த களிப்பில் மனை
திரும்பி தினம் தினம் அணுவணுவாய்
உயிர் துறக்கின்றேன்..
சிலர் காதல் வந்தால் கவிதை
வருமென சொன்னார்கள்..
சிலர் காதலுக்காய் கவிதை
சொன்னார்கள் ..
சிலர் காதலே கவிதை என
சொல்கிறார்கள்..
என் கவிதைகளோ என்னோடு
கரம் சேர்க்கும் நட்புகளுக்காய்
பிறக்கிறது..
உன்னைத் தவிர..
எங்கே உன் எண்ணம்
முடிந்தால் எழுதிக்
கொள்..!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment