கல்லூரியும் நட்பும்..

கல்லூரி தந்த இளமைக் காலங்களில்
கைகோர்த்து நடந்த நட்பின் நாட்குறிப்பில்
உல்லாசம் நிறைந்த சிறுவர் பூங்காவில்
உட்சாகம் ததும்பும் காலை பிரார்த்தனையில்.
நில்லாமல் நிகழ்ந்த சொற்பொழிவுகளில்.
நிலை மாறாத வாழ்வியலில். எல்லோரும்
முகம் பார்க்கும் இடைவேளையில்.
ஒன்றாக உட்கார்ந்த உணவுச்சாலையில்.
சொல்லாமல் அழைக்கும் மணியோசையில்.
செல்லாது இருந்தால் குரு பூசையில்.
சொர்க்கத்தை கண்டோம் கல்லூரியில்.
இவ்வாறு இருந்தோம் அந்நாளினில்
அந்நாளை இழந்தோம் இவ் வாழ்வினில்
அந்நாள் மறுபடியும் எப்போது காண்போம்..?
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72