அறுவடை..

இந்த பூமி சந்தோசப்படும் தருணம்
மானிட விழுமியங்களின் செழிப்பில்
அறுவடை செய்யும் புதிய நிலங்கள்
பதப்படுத்தமுடியாமல் களைகள்
நிறைத்துக் கொள்கின்றது..

பற்றிப் பிடித்திருக்கும் ஒட்டுண்ணித்
தாவரங்களை பற்றவைக்கை அனல்
தணல்களாய் இருப்பதால் அறிமுகம்
இல்லாமல் புதுமுகங்கள் நிலத்தை
கூறு போடுகின்றன..

அன்று ஒரு நாள் என் பண்பட்ட வயல்
நிலத்தில் அழகாய் செழித்திருந்த
நெற்கதிர்கள் எல்லாம் தலை நிமிர்த்திய
வீரத்துடன் தனக்கென தமிழ் நாமத்துடன்
கலாச்சார உடையணிந்து காட்சி
தந்திருந்தன..

இன்று நிலங்கள் நீரோடை இன்றிய
பாலைவனம்நிறை தளும்பி
நிறுத்தமுடியா வாலிபங்களின்
போதை நீர் தெளிப்பில் கண்மணிகள்
உலாவிய செம்மணி வெளிகள்
குருதியால் கோலமிட்டு கூக்குரல்
இடுகிறது..

என்ன செய்ய..? எல்லாம் போற்றும்
முதல்வன் அடிவானத்தில் இருளின்
அரவணைப்பினை தனக்குள்
சுமந்து ஒரு விடிவினை காட்ட
முகம் தாவுகின்றான்..
முயல்கின்றான்..
விடிவு கிழக்கில் மட்டுமல்
வடக்கும் தான் ..
வரும்வரை மேற்கில்
மறைந்தே இருக்கட்டும்..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72