சொல்லால் செதுக்கிய தருணங்கள்..

பறவைகள் கொஞ்சிடும் தருணம்..
பனிமலர் மடியினில் மரணம்..
உறவுகள் இணைந்திடும் தருணம்..
உயிர் வரை தொடருது சலனம்..

கருவினில் குழந்தையின் சிரிப்பு.
என் கவிதையின் மடியினில் தெறிப்பு..
வலையினில் மீன்களின் துடிப்பு..
வறுமையில் வானவில் வெறுப்பு

பலரிடம் இருப்பது பொறுப்பு.
அதை பணிவுடன் செய்வதால் சிறப்பு.
பழகிய நாட்களின் திறப்பு
பலம் நிறைந்திடும் என்றொரு தெறிப்பு..

கறியினில் கலப்பது உப்பு
கடைசியில் சொல்லுவார் உவர்ப்பு
முதுமையில் முதிர்வது அப்பு
முழுமையாய் சொல்லினால் மப்பு

வறுமையில் வாலிபம் கறுப்பு
அதை எழுதினார் வாழ்க்கையோ
சிவப்பு..

உலகினை ஆள்வது அன்பு
உயிர் வரை தொடர்வது நட்பு..
எங்கும் உயிர் வரை தொடர்வது
நட்பு..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72