அன்பெனும் நதி மூலம் ஆழ்கடல்
வையகம் இன்புற இளமையும்
இருகரம் இணைந்திடும் செம்பினில்
நீர்க்கவளம் செவ்விதழ் சீர் தழும்பும்
பண்பினை பருகிவர பவளமணி
மாலையுடன் என்பினை தான் உருக்கி
என்னை வடித்துவிட ஈரைந்து மாதங்கள்
இரவோடு தவமிருந்து ஊன்னோடு உயிர்
தந்து உயிர் காத்த உத்தமியே நீங்கள்
இவ்வுலகம் இருக்கும்வரை இருந்திடவே
இறைவனிடம் யாசிக்கின்றேன்..!
Download As PDF
வையகம் இன்புற இளமையும்
இருகரம் இணைந்திடும் செம்பினில்
நீர்க்கவளம் செவ்விதழ் சீர் தழும்பும்
பண்பினை பருகிவர பவளமணி
மாலையுடன் என்பினை தான் உருக்கி
என்னை வடித்துவிட ஈரைந்து மாதங்கள்
இரவோடு தவமிருந்து ஊன்னோடு உயிர்
தந்து உயிர் காத்த உத்தமியே நீங்கள்
இவ்வுலகம் இருக்கும்வரை இருந்திடவே
இறைவனிடம் யாசிக்கின்றேன்..!
2 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
தான் நானல்லவோ ... என்
நிழலும் நானில்லையே !
பூவே உன்போலவே ... எந்தப்
பூவும் அழகில்லையே!
ஆயிரம் ஜென்மம் வேண்டும் - உன்
அன்புத் தொல்லைக்காக...
நோயும் கூட இன்பம் -நான்
உந்தன் அன்பில் வாழ...
எத்தனை முறைநான் திட்டியிருப்பேன்
துன்பம்துன்பம் தானே - அட
அத்தனைமுறையும் அன்பால்நீயே
என்னை வென்றாய் அன்புத்தாயே..!!
அன்புடன் அபிமா
அன்பு ,பாசம்,நேசம், கருணை,பக்தி நிறைந்த தெய்வம் அம்மா ...மூன்று எழுத்துக்களின் முதலில் உயிரும் இரண்டாவதாய் மெய்யும் கலந்து உயிர் மெய்யாகிய புனிதம் அம்மா...ரொம்ப நன்றி அபிமா உங்கள் எண்ணங்களுக்கு
Post a Comment