என்னோடு நீ செய்யும் சின்ன
சின்ன சண்டைகளெல்லாம்
எதோ ஒரு புதிய மாற்றத்தை
நிகழ்த்திவிட்டு செல்வது
போல உணர்ந்து கொள்கிறது
ஏதுமறியா என் பிஞ்சு உள்ளம்..
உனக்குள் அறிமுகமான உருவற்ற
நிழல் போல தொடர்ந்து வரும்
வாழ்க்கைப் பயணத்தில் பின்
தொடர்ந்து நகர்த்திச் செல்லும்
ஒற்றை மானிடனாய் எனக்குள்
செதுக்கிக் கொள்கிறேன் உளி
சுமந்த உயிர்ச் சிலைகளை.
தொலைவினில் காட்சி தரும்
முழு மதி போல உனக்குள் எழும்
கோபங்கள் ஒவ்வொன்றையும்
ஒளியின் தண்மையால்
சாந்தப்படுத்திக் கொள்கிறேன்.
நீ முகவரி தேட ஆரம்பித்து
கல்லூரியின் வாசலில் முடிவிடம்
கிடைத்தது விட அங்கே நின்று
கொண்டு என் கவிதையோடு
மல்லுக்கட்டும் வீரம் எனக்குள்
ஆனந்தத்தை தந்துவிடுவது போல
உணர்கிறது.
சொர்க்கத்தில் வாழ்ந்து கொள்ளும்
தேவதைகளின் தரிசனம் உயிர்கள்
மரித்த பிறகு தான் காண்கிறது.
இந்த புவியோடையில் ஒரு
சொர்க்கமாய் நீ நிறைந்து
கொள்ள தேவதைகள்
உன்னைக் காண்கின்றன.
உனக்குள் அடங்கும் ஐம்பூதங்களில்
நீ ஒரு அழகான மேகமானாய்.
நாணத்துடன் விடிவெள்ளிகளில்
ஒன்றாய் நான் இருந்து
ரசிக்கின்றேன்.
இவ்வாறு தொடர்ந்து செல்லும்
இந்த கவிதையின் தாள்களில்
நீ திறந்து கொள்ளும் மனக்கதவுகள்
இரண்டாக இருந்தாலும் எனக்கு
நட்பின் ஆழத்தை தந்துவிடு
ஏனெனில் மறுபடியும் மறுபடியும்
உன்னோடு நான் நிறைய சண்டைகள்
செய்துவிட மாதவம்
புரிகின்றேன்.!
Download As PDF
சின்ன சண்டைகளெல்லாம்
எதோ ஒரு புதிய மாற்றத்தை
நிகழ்த்திவிட்டு செல்வது
போல உணர்ந்து கொள்கிறது
ஏதுமறியா என் பிஞ்சு உள்ளம்..
உனக்குள் அறிமுகமான உருவற்ற
நிழல் போல தொடர்ந்து வரும்
வாழ்க்கைப் பயணத்தில் பின்
தொடர்ந்து நகர்த்திச் செல்லும்
ஒற்றை மானிடனாய் எனக்குள்
செதுக்கிக் கொள்கிறேன் உளி
சுமந்த உயிர்ச் சிலைகளை.
தொலைவினில் காட்சி தரும்
முழு மதி போல உனக்குள் எழும்
கோபங்கள் ஒவ்வொன்றையும்
ஒளியின் தண்மையால்
சாந்தப்படுத்திக் கொள்கிறேன்.
நீ முகவரி தேட ஆரம்பித்து
கல்லூரியின் வாசலில் முடிவிடம்
கிடைத்தது விட அங்கே நின்று
கொண்டு என் கவிதையோடு
மல்லுக்கட்டும் வீரம் எனக்குள்
ஆனந்தத்தை தந்துவிடுவது போல
உணர்கிறது.
சொர்க்கத்தில் வாழ்ந்து கொள்ளும்
தேவதைகளின் தரிசனம் உயிர்கள்
மரித்த பிறகு தான் காண்கிறது.
இந்த புவியோடையில் ஒரு
சொர்க்கமாய் நீ நிறைந்து
கொள்ள தேவதைகள்
உன்னைக் காண்கின்றன.
உனக்குள் அடங்கும் ஐம்பூதங்களில்
நீ ஒரு அழகான மேகமானாய்.
நாணத்துடன் விடிவெள்ளிகளில்
ஒன்றாய் நான் இருந்து
ரசிக்கின்றேன்.
இவ்வாறு தொடர்ந்து செல்லும்
இந்த கவிதையின் தாள்களில்
நீ திறந்து கொள்ளும் மனக்கதவுகள்
இரண்டாக இருந்தாலும் எனக்கு
நட்பின் ஆழத்தை தந்துவிடு
ஏனெனில் மறுபடியும் மறுபடியும்
உன்னோடு நான் நிறைய சண்டைகள்
செய்துவிட மாதவம்
புரிகின்றேன்.!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment