ஒரு கல்லூரியின் கதை..

கறை படிந்த வெள்ளை சீருடை
காற்று இல்லாத மிதி வண்டி
புத்தகப் பையுள் அம்மாவின்
கட்டுச் சோறு.

புரட்டிப் படிக்க முடியாத புத்தகங்கள்
புரியாத வாலிப மிடுக்கு
பிடுங்கி உண்ட அடுத்த வீட்டு
மாங்காய்.

பிடிபட்ட மாலை நேரச் சினிமா
பிரிக்க முடியா நட்பின் பலம்
பிரிந்து போன வாழ்க்கை தடங்கள்.

பின்தொடரும் எந்தன் நிழல்
ஒளீந்து கொண்ட எனது திறமை
புரிந்து கொண்ட வறுமையின்
நெருடல்.

பிரிய வைத்த புலம் பெயர்வு.
இத்தனையிலும் மனம்
உகார்ந்தபடி தேடல் கொள்கிறது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72