ஓடும் மேகங்கள்...

ஓ..மேகமே எங்கே செல்கிறாய்..?
நீ விடை சொல்லாமல் விடைபெறுவது
என்னை பிரிதல் போலாகிவிடும்...
...
ஓ..மேகமே ஏன் மௌனிக்கிறாய்..?
உன் மேல் விழுந்த இடிகளை தேவதூதனிடம்
வானவில் சொல்லிடுமா..?

ஓ .. மேகமே ஏன் அழுகிறாய்..?
உன் கண்ணீர்த் துளிகளை நிறுத்து..
நீ சிந்திய கண்ணீர் துளிகளில் நான்
எப்படி குதூகலிப்பது..?

ஓ..மேகமே ஏன் புன்னகைக்கிறாய்..?
என்னை உனக்கு பிடிப்பதனாலா...

ஓ மேகமே ..ஓ மேகமே..ஓ மேகமே...
என்னோடு பேசுவாயா ..?
ஒரு தடவை பேசுவாயா..?Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72