வசந்தங்களின் சிறு ஊடல்...

ஒருமுறை ஜனனத்தில் பலமுறை
வாழ்க்கை கனவுகள் கூட கற்பனையில்
நலம் விசாரித்துச் சொல்லும் சிறு ஊடல்,
வசந்தங்களின் வாலிபத்தில் இலைகளின்
முதிர் நரைகள் காற்றிடை அலசிக்
கொள்கின்றன...

சிறகுகள் அகன்று என்மன வானத்தின்
கூரைகளை மெல்ல நகர்த்தி இரவின்
பெட்டகத்தில் சத்தமின்றி உறங்கும்
மௌனத்தை அவள் சுவாசம் கலந்த
காற்று கரைத்துவிடுகின்றன...

எங்கிருந்தோ தெறித்துக் கொள்ளும் பனித்
துளிகளிடம் இமைகள் விண்ணப்பம்
பெறுவதற்காய் விழித்திருந்த போதும்
கையெழுத்துகள் பொருந்தவில்லை
என கடைசிவரியில் சொல்லிவிட்டு
சற்றும் தெரியாதவள் போல
முகில்களுக்குள் முகத்தை
மூடிக்கொள்கின்ற
அந்த அழகிய
நிலவை...
எப்படி ரசித்துக்
கொள்வது..?Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72