மகுடம் சூடிய என் கவி...

எழுதிய கவிதைக்கு மகுடம்
சூடியது என்னோர் கவி..

தன் மனதில் தேக்கி வைத்த
ஆசைகளை கவிக்குள்
ரசிப்பதாய் தூரத்தில் இருந்து
ஆழமாய் சொல்லியது..

ஒவ்வொரு வார்த்தையின்
கனதியை தன்னிலை மறந்து
நேசிப்பதாய் தினம் தினம்
யாசகம் செய்கிறது..

தன் மௌனத்தின் திறவுகோலை
எப்போது திறக்குமென காத்திருக்கும்
மனதிடம் உறக்கம் அழைப்பதனால்
விடைபெறுகிறேன் என்று உணர்த்தியபடி
உறங்கி கொள்கிறது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72