இளங்காலை வேளை...

பனித்துளிகள் முத்தமிடும்
இளங்காலை வேளை
பரவசம் காண்கிறது
பு(ள்)ல்லினங்கள் மேலே..

கடல் தின்ற மண்குதிரை
காரைகாணும் ஓடம்
கவி எழுதி கரைகிறது
கண்ணீரின் நீளம்..

சிலை வடிக்க சிற்பியிடம்
சிறு உளிகள் கீறும்
சிதறியது சிந்தையால்
வெண்மீன்கள் மாடம்..

மணல் வெளியில் நடை
பழகும் சிறு நண்டின்
பாதம் மலை குடைந்து
மீள்கிறது மறுபடியும்
ஞாலம்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72