நேசிக்கும் உறவுகள்...

முகவரிகள் எங்கே என தேடுகின்ற இடத்தில்
முதிர்ந்த முதல் வித்து நான்..

அகவையில் சிறியவன்,ஆற்றலில் அதை
விட சிறியவன், அழகென்று சொல்லை
அகராதியில் தேடிய போது கருமை எனக்குள்
முதன் முதலாய் மனக்கதவுகளை
திறந்துகொண்டது..

வறுமை என்ற வார்த்தைகளை பிளந்து
கொண்டது தாய்மையின் அன்பு..

சிறகுகள் இல்லாமலே வானத்தை
வட்டமிடலாமென கற்றுக் கொண்டேன்
தந்தையின் அரவணைப்பில்..

உறவுகள் எங்கே என உரைக்கும் உயிர்களுக்கு
பாசத்தின் பிணைப்பினை கற்றுக் கொடுக்கும்
அளவு கோலில் என் தம்பி..!

உள்ளம் சோர்ந்துவிடும் சிறுகணம் அருகிருந்து
பிஞ்சு மொழி பேசி ,செல்லக் கரங்களால்
தேநீர் தந்துவிட்டு இனிப்பு போடவில்லை,
மறுகணம் கேட்டால் உப்பு போடுவேன் என
குறும்பு பண்ணும் அன்புத் தங்கை..

தாழ்த்தும் இவ்வுலகில் மீள எழுந்து வருவாய் என
எங்கோ இருந்து ஒரு குரலின் அழைப்பு திரும்பி
பார்க்கிறது மனம் அங்கே ஒரு அழகிய நட்பு..

இதை விட இவ்வுலகில் வேறென்ன இன்பம்
அன்பான உறவுகள் அருகிருக்க ..

ஒவ்வொரு அசைவுகளையும் எண்ணியபடி
என் விளிகளை மூடிக்கொள்கிறேன்
இரவின் மடியில்..

அந்த இரவும் என்னைபோல கருமை
என்பதால் என்னை எனக்கு மட்டும்
அறிமுகம் செய்து கொண்டது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72