நூல் அறுந்த பட்டங்களை
வானத்தில் ஏற்றி மகிழ்ந்திட
வாழ்வை கடன் வாங்கிறது
வெளிநாட்டுக் காற்று..
எந்திர உலகத்தை புரட்டிப் போடும்
இயந்திரங்கள் முன்னால் இயந்திர
மனிதனாய் ஈழத் தமிழன் அவன்
வாழ்வை கரைத்துப் போகிறது
வெளிநாட்டுக் காற்று..
சிந்தனை இல்லாமல் சிந்தும்
வியர்வை துளிகளின் வரட்சியில்
வெடித்த பாளங்களாய் அங்கங்கள்
பொதியப் பட்டு கானகம் மீள்கிறது
வெளிநாட்டுக் காற்று..
இவ்வாறு சொல்லிக்கொண்டே
போகலாம் ஆனால் காற்றின்
கனதி அதிகமானால் காதுகள்
வெடித்துவிடுமென எண்ணி
காற்றில் முடிக்கின்றேன்
என் கவியை..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment