கால ஓட்டத்தின் கணங்கள்...

கால ஓட்டத்தின் கணங்களை
இதய கூண்டுக்குள் நிறுத்தி
வைக்க..

கடிகார முட்கள் நகர்வில்
முகவரி தேடி அலையும்
சிறு வண்டின் வண்ண
வண்ண சிறகடிப்பின்
நாளிகைக்குள் ஒளிந்து
கொள்கிறது..

அதன் மௌனம் தொலைவில்
மின்னும் விண்மீன்கள்
விழுதுகளின் கரங்களை
பற்றி கொள்ள துடிக்கி்றது..

பூமித்தாய் பெற்றெடுத்த
மழலைகளை மீண்டும்
தன் மடியில் சுமக்க
அழைத்தது..

இயற்கை பிரசவித்த
உணர்வுகளின் கணங்களில்
உயிர்கள் வலியில் துடித்தது
அந்த நிமிடங்கள்..

என்றும் கண்ணாடி கூண்டுக்குள்
சுழலும் வெற்று அம்புகள்
போல ஆழிப்பேரலையில்
முட்டி மோதுகிறது ..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72