சிறகடிக்கும் நினைவுகள்...

சிட்டுக்குருவிகளின் சிறகுகளில்
சிறகடிக்கும் நினைவுகளுக்கு
கானம் இசைக்கும் கருங்குயிலின்
கவிகள்..

ஒற்றை குடைக்குள் நிலவின்
முற்றத்தில் மழலைகளின்
உள்ளத்தில் சஞ்சரிக்கும்
பொழுதுகளில் நனைக்கும்..

மழைத்துளிகளுக்குள்
சுட்டெரிக்கும் சூரியனுக்குள்
வெட்ட வெளியில் உறங்கும்
நிலவில்..

முட்டி மோதும் அலைகளுக்குள்
நந்தவனத்தில் உறங்கும்
புஸ்பங்களில்..

வீசி வரும் தென்றலில்
ஒலித்து கொண்டே
இருக்கும்..

அதை நான் ரசித்து
கொண்டே இருப்பேன்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72