தோல்வியின் கருவில் ஜனித்த முதல் வெற்றி...

எண்ண கருப்பைக்குள் சுமந்த
நினைவுகளெல்லாம் இன்று
வெண்மையாய் விரிகின்றது..

நிலவின் முற்றத்தில் உறங்கியபடி என்
கரங்கள் வடித்த கவிதைகளெல்லாம்
இன்று கண்ணீரில் அடித்துசெல்லப்பட்டு
ஒரு மூலையில் ஒதுங்கிக்கொள்கிறது..

குருதி கொப்பிளிக்க இதயம் கனக்க
கல்லறைகளின் அருகே
கால்கள் தடம்புரள்கிறது..

நாட்களை எண்ணியபடி நகரும் என்
வாழ்க்கை நான் மட்டும் தனிமையின்
துணியை அணைத்தபடி
தரையில் தடம் புரள்கிறேன்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72