காதலர் தினம்..

காதலர்களே காதலை வாழவைத்துவிட்டு
காதலர்களை இழக்காதீர்கள் காதல் என்றும்
உறங்குவதில்லை உங்கள் விழிகள்
விழித்திருக்கும்வரை.!

இரண்டு இதயங்களின் துடிப்புக்களை
ஒன்றிணைத்து விளிகளால் பேசும்
மௌன மொழி
..காதல்..

காதலை காதலித்தல் காலங்கள்
நீள்கிறது காதலரை காதலித்தால்
கல்லறைகள் நீள்கிறது.!

காதல் அழிவதில்லை காதலர்கள்
இருக்கும்வரை உண்மைக் காதல்
அழிந்துவிட்டால் காதலர்கள்
இருப்பதில்லை.!

உன்னை இழந்தாலும் உனக்குள் எழுகின்ற
நினைவுகளை இழந்தாலும் உள்ளத்தின்
கருவறையில் உண்மையாய் பிரசவிக்கும்
காதலை இழக்காதே.!

நான்கு விழிகளின் சந்திப்பில் விழுகின்ற ஒரே
விம்பம் காதல் காதலியுங்கள் காதலர்களை
அல்ல காதலை.!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72