ரஞ்சனமாய் ஒரு கவி..

நீ ஒளிந்து கொள்ளும்
இடமெல்லாம் என்
நிழல்களின் ஸ்பரிசம்..

நீண்டு தொடரும்
பயணத்தின் முடிவில்
நிலைகுலைந்த
நினைவுஅலைகள்..

நீந்திவரும் பிரபஞ்சத்தில்
மீண்டும் மீண்டும் ஒரு
புதுக்கவி எழுதி தினம்
அதை ரசிக்கும் ஏகாந்த
கனவுகளுடன்..

மௌனத்தின் மடியில்
மலர்களின் இதழ்களில்
நிலவின் முற்றத்தில்
காற்றின் திசையில்
வெம்மையின் உயிர்
துடிப்பில் ஒளிந்து
கொள்ளும் என்
அழகிய கவி..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72