வாழ்ந்து மரித்த உயிர் அணுக்கள்..

எந்திர உலகத்தின் ஒப்பனைக்கேற்ப
கற்பனைகள் விரிந்துகொள்ள இரும்பின்
கருவில் உயிர் அணுக்கள் பதியமிடப்பட்டு
புதிய புதிய விந்தைகள் பிறப்பெடுக்கின்றன..

உயிர் உள்ளவரை பேசும் கற்கள்
ஒவ்வொன்றும் காலத்தின்
ஜனனத்தில் மீட்சி பெறுகின்றன..

மண்ணின் பருவத்தை மணந்து
கொள்வதற்காய் மழைத்துளிகள்
பூமித்தாள் பணிந்து ஆசிர்வாதம்
பெறுகின்றன..

காற்றின் வேகத்தை சுதாகரித்துக்
கொள்ளும் முகில்கள் ஒவ்வொரு
வினாடியும் புணர்ந்து கொள்ள தாய்மை
அடைந்து மகிழ்கின்றது வானவில்..

சக்கரத்தின் சுழற்சியில் அச்சின் பங்கு
அளவிட முடியாதெனச் சொல்லி தன்
இதயத்தில் அக்கினியை இருந்தி அகன்று
கொள்கின்றது அகல்விளக்கு..

இத்தனை நர்த்தனங்களையும்
சின்ன பொட்டுவைத்து ஒளிந்தபடி
வேடிக்கை பார்க்கும் நட்சத்திர
மலர்வனத்தில் வாழ்ந்து மரிக்கிறது
என் மனம்.!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72