வாழ்ந்த நாட்கள்..

நினைவுகள் நீந்தும் இதய
அறைகளின் ஒரு மூலையில்
சின்ன சிட்டுக்குருவி சிறகடிக்க..

பகலும் இரவும் பாலைவன
நதிகளில் மூழ்கி எழுகிறது
இதுவே கனவுகளின்
முதல் பிரசவம்..

வாழ்ந்த வாழ்க்கை வலிகளை
சுமக்கையில் வாழுகின்ற
வாழ்க்கை ரணங்களாய்
தவிக்கையில்..

வாழ இருக்கும் வாழ்க்கை
மட்டும் கலைந்தோடும்
மேகங்களாய் கல்லறையில்
உதிர்கிறது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72