மஞ்சள் நிலா ..

ஓடும் மேகங்கத்தின் சலசலப்பில்
விண்மீன்கள் கண்சிமிட்ட நாளும்
விடிகின்ற பொழுதுகள் நாளைய
வருகையை இன்றே எதிர் பார்த்து
காத்திருக்கும்..

தூக்கம் கலைந்தெழந்த
வெண்முகில்கள் கூந்தலை
சரிபார்த்து உலர்த்துவதர்காய்
தென்றலில் தூதனுப்பி வெம்மையை
வரச்சொல்லி அழைத்தது..

ஓரமாய் ஒற்றை குடைக்குள்
ஒளிந்திருந்த மழைத்துளிகள்
வெம்மையின் உயிர்த்துடிப்பில்
விளித்தெழ பூகம்ப புயலொன்று
பூமியில் பிரசவிக்கும்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72