உன் நினைவுகளோடு...

பூக்கும் பூ..
சிரிக்கும் குழந்தை..
மாலை மழை..
இரவு நிலா..
வருடும் தென்றல்..
அலைகளின் ஓசை...
கண்சிமிட்டும் விடிவெள்ளி..
அனைத்திலும் உன் காந்த
குரலின் ஜனனம்..

எங்கோ தொலைவில் நான்
என் உள்மனம் உன் எதிரொலிகளை
மட்டும் யாசிக்கின்றன வாழ்வின்
தொலைவில் இரவு கனிந்து
அருகில் வருகிறாய் என் துயரங்களை
அகற்றும் தென்றலாய்..

கவியும் கானமுமாய் நிலவின்
சாரலில் மெல்லிய மழை துளிகளின்
தூறல்களாய் வர்ணத்துரிகைகளால்
காற்றலையில் ஓவியம் தீட்ட..

காதல் கொண்ட உள்ளங்களின்
இதயங்கள் இணையத்தால்
இணைக்க கடிகார முட்களுக்குள்
நாழிகைகள் தேடும் காதலர்
நேரமாய் நமக்கிடையே நீக்கமற்று
நிறைந்திருக்கும் ஆத்மராகத்தின்
பனிக்காற்றே..

நீ வாழ்வின் தொலைவில் இரவு
கிளித்து அருகில் வருகிறாய் என்
துயரங்களை அகற்றும் மழையை
போல..

உன்னைவிட உன் நினைவுகள்
என்னை மட்டும் அதிகமாக
நேசிக்கின்றன என நினைக்கிறேன்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72