மணக்கோலம்..!

கொவ்விதழ் பூந்தளிரின்
கொஞ்சும் லயத்தினுள்ளே
கொன்றை விழுதுகள்
கொஞ்சி மகிழ்ந்திருக்க ..!

குஞ்சரம் பூட்டிய மாங்கனி
வண்டூடல் காரிகை மீதேறி
செஞ்சுடர் ஏற்றிட ..!

பஞ்சணை பவளங்கள்
மஞ்சளின் மாவடியால்
நெஞ்சுரம் பூட்டிட..!

வந்தவர் வாழ்க்கையும்
வருகையின் வாசலை
வஞ்சியர் வாழ்த்திட..!

பந்தமும்,பாசமும்
சிந்திடும் நேசமும்
வந்தனம் பாடிட..!

மந்தமும் மாருதமும்
மந்திர வாசனையும்
மன்னவன் தாழ் பணிய ..!

மங்கள வாத்தியமும்
மணமகள் நாட்டியமும்
மாங்கல்ய மணவறையில்
மடி கொள்ள ..!

அந்தியும் ஆதவனும்
அகல்விளக்கின் அரியணையில்
அருந்ததி விருந்தோம்ப..!

இந்திர மாதவம் இருக்கையில்
நாம் தினம் இன்புற வாழ்ந்திடுவோம்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72