உன்னைச் சுற்றும் பூகோள
பந்தின் ஒளிவட்டமாய்
ஓர் நட்சத்திர பந்தலில்
என் தரிசனம்..!
சிறகுகள் விரித்தபின்னும்
சிந்தனை வானில் தினம்
தினம் என் எண்ணங்கள்
இறக்கை கட்ட ..!
கற்பனை உலகின் ஸ்பரிசத்தில்
விரிந்து கொள்ளும் அர்த்தயாம
பொழுதுகள் இயற்கையில்
விழித்துக் கொள்ள..!
நரம்பு மண்டலத்தின் கதியில்
விழி நீர் அருவியாய்
விதி வழியூடே காதல்
நதியில் கரைசேர..!
இறுகிக் கொள்ளும்
வெண்முகில் திரட்சியை
சொப்பனத்தின் அரியணையில்
உட்கார்ந்தபடி ரசித்திருக்க..!
வளையோசைகள் கொலிசுகளில்
உரசியபடி வானவில்லின் ஊடலை
ஊடறுத்து மந்திர கண்ணாடிகளின்
தெறிப்பில் வெட்டிமறைய..!
ஒற்றைக் குடைக்குள் முழு
நிலவாய் கருமேகங்களை
களைந்தபடி இரவின் மடியை
சமைத்துக் கொள்வோம்...!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.





Washington Time

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment