நட்பு..!

அனைத்து நண்பர்களுக்கும்
என் இனிய இதயம் கனிந்த
நண்பர் தின வாழ்த்துக்கள்..!

மழலைப் பருவத்தில்
மழைநீரில் கப்பல் விட
ஒரு நட்பு...

இளமை பருவத்தில்
மனம் விட்டு
பேச ஒரு நட்பு...

முதுமைப் பருவத்தில்
அனுபவக் கனிகளை
பகிர்ந்து உண்ண
ஒரு நட்பு...

இப்படி நட்புகள் பல இருப்பினும்
நட்பின் வலிமை குறைவதில்லை...

துன்பத்தின் போது விழிகளை
நனைத்துச் செல்லும் கண்ணீரை
துடைக்க ஒரு நட்பு வேண்டும்...

அகம் மகிழ்ந்து அன்பை
விதைக்கின்ற போது கரம்
பிடிக்க ஒரு நட்பு வேண்டும்...

நானாக எனக்குள் தனிமையில்
நானிருக்க நட்பே...
நீ துணையாய் எனக்கு
நட்பாக வேண்டும்...Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72