வர்ண ஜாலம்..!

வசந்த காலங்களில் நான்
காணும் வர்ணஜாலம் ...!

ஒளிமயமான வெண்மை பட்டு
உடுத்திய தாரகைகள் நீண்டு
நெளிந்து நடுவானில் கோலம்
இட..

பஞ்சணை விரிப்புக்களின்
சாமரத்தில் பவள மெட்டிகள்
விரல்களின் இடையில் நர்த்தனம்
ஆட..

வண்ண வண்ண தோகைகளில்
கண்ணிமைகள் செதுக்கிய
பூஞ்சிட்டுகள் முத்த மழையில்
நனைய..

சாலையோர மரநிழலில்
பனித்துளிகள் உட்கார்ந்து
இளைப்பாற..

சின்ன குயில்களின் சந்தம்
இதய வீணையில் புதுராகம்
மீட்டி இசையோடு இணைந்து
கவி பாட..

தூரிகை இல்லாமல் தனித்தனி
முக்கனிகளின் தேன்சுவைத்
தூறல்களில் தென்றல் என்னை
தழுவிச் செல்ல..

கரும் கூந்தல் குழைந்த அழகிய
கன்னிகை தண்மையின் மடியில்
தாய்மை கொள்ள..

எனக்குள் நான் தனிமையாய்
இரவின் சாளரத்தை இறுக
மூடியபடி வசந்தகால கனவேடு
வாழ்க்கையை ரசித்துக்கொண்டு
உறங்குகின்றேன்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72