நேசிப்பாயா..?

மலர்கள் மணம் புரியும்
பிருந்தா வனம் எங்கும்
உன் நினைவுகள் மட்டும்
பனித்துளிகளாய் கொட்டிக்
கிடக்கின்றன..!

உன் சுவாசங்கள் நிரம்பி
வளிந்தோடும் புல்லாங்குழலின்
ஒவ்வொரு துளையிலும்
என் காதலின் திணிசுகள்
ஒட்டிக்கொள்ள மனதுக்கு குடை
விரித்துக்கொள்கிறது சந்தங்கள்
மறந்து சங்கீதம் மீட்டும்
உன் இதய நாளங்கள்..!

கனவுகளை கடன் வாங்கி
உனக்குள் உறங்கும் சுவாச சிசுக்களை
கருக்கொள்ள வைக்கின்றன என்
முத்தங்கள் ஒவ்வொன்றும்..!

இதழ்கள் பற்றிக்கொள்ளும் ஒவ்வொரு
நிமிடமும் புதிய இன்ப அருவிகள்
நமக்குள் பற்றிக்கொள்கின்றன ..!

எங்கோ ஒரு தொலைவில் தொன்மையின்
புரியாத அனுபவங்களை மீண்டும்
மீண்டும் மீட்டிப்பார்க்க அந்த அழகிய
பிருந்தாவனம் மலர்களில்
விழித்துக்கொள்கிறது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72