காத்திருப்பு..!

வெகு நேரமாகியும் உன்வரவை எண்ணி
காத்திருக்கின்றன என் இருவிழிகளும்..!

இமைகளின் நர்த்தனத்தில் புருவங்கள்
இரண்டும் பூகம்ப தாள்களை திறந்து
கொள்கின்றன..!

என் பாதங்கள் இரண்டும் நீதந்த
கொலிசுகளின் கம்பீரத்தில்
உயிர்கொள்கின்றன..!

உன்னை என் இதய கருவறையில்
சுமப்பதனால் என் பாதச் சுவடுகளின்
கனதியில் ஆழங்கள் அதிகம்
ஆகின்றன ..!

இவற்றை உன் உள்மனது
நம்ப மறுத்தால்..!

அந்த வானத்தை கேட்டுப்பார்..!
இல்லை,இல்லை அதில்
உறங்கும் நிலாவை
கேட்டுப்பார்..!

இல்லையென்றால் பூமிக்கு
வந்து விண்மீன்களை
கேட்டுப்பார்..!

விண்மீன்கள் சொல்லும்
செம்மீன்களின் முட்களில்
கடிகாரமாய் நான்
இருப்பேனென்று ...!

புரிந்து கொள்வாயா ?
பிரிந்து செல்வாயா ?
..{அது சரி}..

சஞ்சலப்பட்ட உன் மனதுக்கு புரியுமா ?
என் இருவிழிகளும் வீதிகளை விட்டு
விலகாமல் உனக்குள் நடந்து
கொண்டிருப்பதை..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72