கூரை விளிம்பு வழியே
சாளரம் திறந்திருக்க..
இரவின் நிசப்தம் உறங்கும்
என் விழிகளுக்கு ஒத்தணம்
கொடுத்துக்கொண்டிருக்கின்றது...
கடந்து சென்ற பொழுதின்
சிந்தனை நீரோட்டங்கள்
உலர்ந்து உலர்ந்து சருகாகி
வெடித்த பாலங்களின்
கால்வாய்களினுடே புரையோடி
கொண்டிருந்தன...
புழுதி படிந்த காற்றின்
அம்புகள் கூரையின்
ஒழுக்குகளை நிறைத்து
நிறைத்து தாவாரங்களின்
சுவர்களில் முட்டி மோதிக்
கொண்டிருந்தன..
ஒற்றை பருக்கையை ஏந்திய
என் சுட்டு விரல்கள் உடைந்து போன
தட்டுக்களின் பீறல்களில் வழிந்தோடும்
குருதியை சமைத்து கொள்கின்றன..
பந்தபாசங்கள், சொந்தங்கள்
எல்லாம் என் ஏழ்மையின்
தரிசனத்தை எக்காளமிட்டு
ரசித்து கொள்ள அனாதையாய்
தெருவோரத்தின் மற்றுமொரு
ஒலைக்குடிசையில் நட்பின்
கற்பகதரு எனக்காய் நிழல்
குடை விரித்து கொண்டது..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment