கோகுலத்தில் ஓர் நாள்..!

புல்லில் கூட நிமிர்வு கண்டேன்..
பூவில் கூட கனிவு கண்டேன்..
சொல்லில் இன்று பரிவு கண்டேன்..
உன் சோகம் கலைந்த நேசம் கண்டேன் ..

பெண்மை தந்த தாய்மை கண்டேன்..
அவள் பேதை மகவின் வீரம் கண்டேன்..
கண் இ{மை} தோய்ந்த கருமை கண்டேன்..
கால்கள் நனைந்த தடங்கள் கண்டேன்..

வெண்மை படர்ந்த இதயம் கண்டேன்..
வேர்கள் தாங்கும் விழுதாய் கண்டேன்..
உண்மை பருகும் உதடுகள் கண்டேன்..
உயிரில் ஒளிரும் தீபம் கண்டேன்..

மென்மை குழைந்த புருவம் கண்டேன்..
மேன்மை கமழ்ந்த வதனம் கண்டேன்..
பன்மை மொழிந்தாள் ஒருமை கண்டேன்..
பார்க்க வியக்கும் உவமை கண்டேன்..

மெய்யில் துலங்கும் உணர்வைக் கண்டேன்..
மேனி சிலிர்க்கும் சிரிப்பை கண்டேன்..
கையில் தாங்கும் வளையல் கண்டேன்..
பாதம் குடைந்த கொலிசை கண்டேன்..

கன்னி கழுத்தில் கலசம் கண்டேன்
காதல் நதியில் கூந்தல் விரிப்பில்
கமலம் கண்டேன்..

கண்டேன் கண்டேன் கனவில் கண்டேன்..
கலைந்து போகா உருவம் கொண்டேன்..
கனவில் துருவம் உறைந்தும் கண்டேன்..
கவிதை வடிவில் கவியை கண்டேன்..
விளிகள் திறந்தேன் பகலாய் உணர்ந்தேன்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72