நினைவுகள் துரத்திச் செல்லும்
நிழல்களைக் கேட்டேன் கவிதை
வடிப்பதற்கு ஒரு தூரிகை தருவாயா..?
இலைகள் உதிர்ந்து கொள்ளும்
மரங்களைக் கேட்டேன் என்
நினைவுகள் உறங்கிவிட நிழல்
தருவாயா..?
மலர்கள் மணந்துவிடும் வண்டினைக்
கேட்டேன் மௌனமாய் பிறந்துவிட
மொட்டுகள் தருவாயா..?
குரலுக்குள் சந்தம் பூட்டும் குயில்களைக்
கேட்டேன் என் கவிதைக்கு மெட்டு
கட்ட காத்திருப்பாயா..?
புயலுக்குள் நர்த்தனமிடும் தென்றலைக்
கேட்டேன் பாதங்களில் பரதங்கள்
சதங்கையிட பாரினில் பள்ளி கொள்வாயா..?
கயலுக்கு விளி தந்த விண்மீன்களைக்
கேட்டேன் சமுத்திர ஆழத்தின் சரித்திர
பெட்டகத்தை மறுபடியும் திறந்து
கொள்வாயா..?
இத்தனையும் என்னருகில் இருந்து விட
எண்ணிவிட்டேன் நான் இறந்த பின்பும்
என் உடலை மண்ணிடமே தந்துவிட்டேன்
இவ்வுலகில் மரித்ததனால் இயற்கையிடம்
கேட்கின்றேன் என் உயிரை தந்துவிட்டால்
என்னை நீ நேசிப்பாயா ..?Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment