நட்சத்திர வனம்...

நீளமாய் கிடந்த மலையின் அடிவாரத்தில்
கொட்டிக்கிடந்த பூக்கள் நீ வருவதைக்கண்டு
நாணயம் சுண்டி அதிஷ்டம் பார்த்துக் கொண்டிருந்தன ...

முன்னே விரிந்திருந்த தடாகத்தின் அருகில்
அருகில் நீயிருக்க கற்களை வீசிக்கொண்டிருந்தேன்
அலையாய் உன் நினைவுகள் எழுந்தன ...

என் கவிதைகளின் தீரா மொழி நீ
என்று என்னை நகர்த்தப் போகின்றாய்
உன் பெயர் கடந்து ...?

கொட்டிக் கொண்டிருக்கும் மழையில்
நானும் நீயும் நடந்து கொண்டிருக்க குடைக்குள்
நனைந்து கொண்டிருந்தன எங்கள் மனசுகள் ...

சத்தமில்லாத நூலகத்தில்
புத்தகங்கள் முனனால் விரிந்திருக்க இருவரும்
கண்களை வாசித்துக்கொண்டிருந்தோம் ...!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72