அவள் விளிமடலில் வரைந்த
கடிதம்..!
பன்னீர் தூவும் பூந்தோட்டத்தில்
வண்டும் புள்ளினங்களும்
சப்தமிட்டுக்கொண்டிருக்க
உன் கொலிசுகள் சங்கீதம்
பாடிக்கொண்டிருந்தன...
நீ வாரது போகும் நாட்களில்
ஆரம்பமாகின்றது வந்து போன
நாட்களில் விழுந்திருக்கும்
காலடித்தடங்கள் மீதான கவனமும்
காதலும் ..
பேச்சிழந்து போயிருக்கும் வாழ்க்கை
தடம் முழுதும் கொட்டிக்கிடக்கும்
கோடி ரோஜா இதழ்களாய்
உன் கொலிசின் ஒலிகள் ...
மனசை கலைத்துப் போட்டு
காணாமற் போகின்றாய்
காணாமற் போன வாழ்க்கைக்குள்
நிறைந்து கிடக்கும் உன் காதல்
நினைவுகள் ...
அழைக்கும் போதெல்லாம் எடுக்காமல்
வரும் மணி ஒலிகளின் மடியில்
நிறைந்திருக்கின்றது காதலின்
பரிதவிப்பும் காணாத ஏக்கமும் ...Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment