உள்ளத்து உணர்வுகள்.!

சின்ன மூக்குத்தி தேன் சிந்து
புன்னகை வானத்து விண்மீன்கள்
வளைந்தாடும் கருங்கூந்தால்
பூவுக்குள் ஒரு பட்டு உடுத்தி
வைகறை பொழுதினை குழைந்த
அழகிய கன்னி பாதம் புடை சூழ
தன் காவலன் தோள் சாய்ந்து
பவனி வருகின்றாள்.....

வரிகளுக்குள் வலிமை சேர
வார்த்தைகள் சுடர்விடுகின்றன
வலிமையான வாழ்க்கை தேட விதி
வழியே புது பயணம் தொலைதூரம்
நடந்தும் கால்கள் வலிக்கவில்லை
சொப்பனத்தில் ஒருநாள் கூடு கட்டி
வாழ்ந்த புது அனுபவம் தோன்றி
மறைய ஒரு புதிய திசையில்
வாழ்க்கை வெளிக்கிறது ...

நீள்கின்ற தொடுவானில் நீந்திவரும்
கருமுகிலும் வீழ்கின்ற மழைத்துளியை
ஏந்துகின்ற குளிர்காற்றும் பாடுகின்ற
முழுநிலவை பருகிடவே ஆசைகொள்ளும்...

மௌன சிறைகளை உடைத்து சிறகு
விரிக்கும் பறவைக்கு அதன் இறக்கையின்
வலிகள் தொலை தூர பயணத்தின் முடிவில்
அர்த்தமற்ற சுவடுகளாய் வெடிக்கிறது ...

சந்தங்கள் மறந்துவிட புது சங்கதி
எழுதிவைக்க சிந்தை இடம்கேட்கும் ..
சின்ன சின்ன நினைவுகளில் சிறகுகள்
வாங்கி பறந்து விட..

மண்ணுலகும் விண்ணுலகும்
மணவாழ்வில் கரம்பிடிக்க
கண்ணிலே பனித்துளிகள் பாவை
உள்ளம் நனைத்துவிட சொர்க்கத்தின்
முதல்படியில் வெற்றியின் மறு
தாக்கம் பற்றிக்கொள்ளும் ...
இது காதலின் ஆரம்பம்..
காதலர்களுக்கல்ல ..
காதலுக்கு ...Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72