இயற்கையின் புணர்ச்சியில் என் இதயம்..!

ஒளிந்து ஒளிந்து முகம் காட்டும்
முழுமதியின் சிறைக்கதவில்
சின்ன சின்ன விண்மீன்கள்
சிந்தைனையை முத்தாக்கி
சிந்தையிலே முத்தமிட
வந்து வந்து போகும்
வானவில்கள் வழியனுப்பும்..

அந்த{ஆத}ஆடவனின் உள்ளத்தில்
அகல் விளக்காய் நான் இருக்க
வானவில்லை மணந்துகொள்ளும்
வஞ்சகனே நீ வாழியவே என்றுரைக்கும்..

வெள்ளை முகில்களுக்கு
செல்ல குறும்போடு நீந்திவந்த
பொழுதுகளை வஞ்சகமாய் நீ
நினைத்து வானவில்லை கரம்பிடித்தாய் ..

சிந்தனைகள் சிதறுகையில் சட்டென்று
வானவில்லும் உன்னைவிட்டு இறக்கை
கட்டி பறக்கையிலே ..
அகல்விளக்கை அரவணைப்பை
அன்று தான் உணர்ந்து கொள்வாய் ..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72